யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவம்; இருபது மாணவர்கள் கைது
யாழ்ப்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் இருபது பேர் கைது செய்யப்பட்டு நேற்றிரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சக இரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது பிளேற் கொண்டு வெட்டி காயப்படுத்தியமை தொடர்பிலேயே மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கைதானவர்களை 26 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைப் கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் இருவர் மீது நேற்று முன் தினம் வியாழக் கிழமை இரவு ஓர் மாணவர் குழு மூர்க்கத் தனமாகத் தாக்கி பிளேற்றினால் அதிக இடங்களில் வெட்டியும. சித்திரவதை புரிந்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த இரு மாணவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளிக் கிழமை விசாரணையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் 20 மாணவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்
கைதான மாணவர் 20 பேரையும் எதிர் வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான உத்தரவிட்டுள்ளார்.