புறாவால் புது பிரச்சனையில் சிக்கிய தவெக தலைவர் விஜய்
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழக தேர்தல் பிரசாரத்தின்போது புறாக்களை பறக்கவிட்ட நிலையில் புது பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
புறாக்களின் உடலில் தவெக கட்சி கொடியின் வண்ணம் பூசப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் விஜய்யின் இந்த செயலுக்கு 'பீட்டா இந்தியா' கண்டனம் தெரிவித்தும் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளது இதுதொடர்பாக 'பீட்டா இந்தியா'' எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

''தேர்தல் பிரசாரத்தின்போது புறாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த புறாக்களின் உடலில் தவெக கொடியின் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
அரசியலுக்கு பறவைகள், விலங்குகளை பயன்படுத்த வேண்டாம். விலங்குகள், பறவைகள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவை அல்ல ' என கூறப்பட்டுள்ளது.