தவெக தலைவர் விஜய் தேர்தலில் களமிறங்கிய தொகுதிகள் ; அறிவிக்கப்பட்ட 234 வேட்பாளர்கள்
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.
முதல் வேட்பாளராக சி.ஜோசப் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர விடுதியில் இந்த தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்து வருகிறார்.முன்னதாக இளைஞர்களுக்கான தேர்தல் உத்தரவாதங்கள் என்ற பெயரில் ஒரு பட்டியலை விஜய் வெளியிட்டார்.
விருகம்பாக்கம் தொகுதிக்கு தன்னுடைய உதவியாளர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதனின் பெயரை அறிவித்தார். சபரிநாதனின் தந்தை ராஜேந்திரன், விஜய்யிடம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர். ராஜேந்திரன் மீதான அன்பை வெளிக்காட்டும் விதமாக அவரின் மகன் சபரிநாதனுக்கு வாய்ப்பளித்து விஜய் அறிவித்தார்.
இச்சம்பவம் பேசுபொருளாக மாறியது.