அரசு விழாவில் அடாவடி மேயர் பிரியாக்கு தவெக எம்.எல்.ஏ பல்லவி பதிலடி
சென்னை திரு.வி.க நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி விழா ஒன்றில் சென்னை மேயர் பிரியாவிற்கும், முதலமைச்சர் விஜய் தலமையிலான த.வெ.க எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே அரங்கேறியுள்ள ‘மெழுகுவர்த்தி’ மற்றும் ‘ரிப்பன்’ சண்டை அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பில் இ ந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது,
பள்ளி விழா நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றும் நிகழ்வின் போது அரசியல் ஈகோ உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மேயர் பிரியா விளக்கேற்றிய பின், அடுத்ததாக விளக்கேற்ற எம்.எல்.ஏ பல்லவி கையை நீட்டியுள்ளார்.

பல்லவியைப் புறக்கணித்த மேயர் பிரியா
ஆனால், மேயர் பிரியா அவருக்கு மெழுகுவர்த்தியைத் தராமல், அருகில் இருந்த அதிகாரிகளுக்குக் கொடுத்து பல்லவியைப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்த நிகழ்வில், மேயர் பிரியா அதே மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ பல்லவியிடம் நீட்டியபோது, முந்தைய புறக்கணிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பல்லவி அதை வாங்க மறுத்து அங்கிருந்து நகர்ந்தார்.
இந்த மோதல் குறித்து த.வெ.க எம்.எல்.ஏ பல்லவி பேசுகையில், தங்களின் அரசியல் அணுகுமுறையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
"விட்டுக்கொடுக்குறதால நாம ஒன்னும் கெட்டுப்போகமாட்டோம். எங்க தளபதியே (விஜய்) பொறுமையா இருக்குறதால தான் இந்த இடத்துக்கு வந்திருக்காரு. அவருக்கு பின்னாடி இருக்குற நாங்களும் பொறுமையா தான் இருப்போம். பொறுமையா இருக்குறதால நாம ஒன்னும் தாழ்ந்து போயிட மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில் மேயர் பிரியாவின் புறக்கணிப்பு அரசியலும், அதற்கு எம்.எல்.ஏ பல்லவியின் 'பொறுமை' கலந்த பதிலடியும், வரவிருக்கும் நாள்களில் தி.மு.க மற்றும் த.வெ.க இடையேயான மோதல் இன்னும் தீவிரமடையும் என்பதையே உணர்த்துகிறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.