2 கோடியை கடந்த த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் இன் , தமிழக வெற்றிக்கழக உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது.

34.92 சதவீத வாக்குகளை அள்ளி தி.மு.க., அ.தி.மு.க. பாரம்பரிய கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் 10ஆம் திகதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். இதற்கிடையே, த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியை கடந்துள்ளது.
மொட்டையை மறைக்க விக் ..பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை ; உயிரிழந்த மருத்துவரின் காதலன் குறித்து பகீர் தகவல்
இதனூடாக தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட கட்சிகளில் அதிக உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக த.வெ.க. தற்போது உருவெடுத்து இருக்கிறது.
2 கோடியை கடந்த உறுப்பினர் சேர்க்கையை த.வெ.க.வினர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.