திடீரென உயிரிழந்த இளம் நடிகரால் அதிர்ச்சி!
இந்தியா- மும்பையில் உடற்பயிற்சியின்போது டிவி நடிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் பல்வேறு சின்னத்திரை தொடர்களில் நடித்திருப்பவர் சித்தாந்த் விர் சூர்யவன்சி(46).
இவர் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது திடீரென அவர் சுருண்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இந்நிலையில் சித்தாந்த் விர் சூர்யவன்சி மறைவு பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை உயிரிழந்த சித்தாந்த் விர் சூர்யவன்சிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.