புத்தாண்டில் இந்த இரு பொருளையும் மறக்காமல் வாங்கி விடுங்கள்; சீரும் சிறப்புமாக வாழலாம்!
வருடத்தின் முதல் நாளில் முதலில் நாம் பார்க்கும் பொருட்களை வைத்து தான் அந்த வருடத்தில் நாம் சீரும் சிறப்புமாக வாழ்வது இருக்கும் என்ற ஐதீகம் உண்டு.
இதை யே தான் நாம் முன்னோர்கள் தமிழ் புத்தாண்டு கனி காணுதல் என்று ஒரு முறையாகவே பின்பற்றி வந்தார்கள்.
மங்களப் பொருட்கள் முதல் பணம், பழங்கள் என அனைத்து நல்ல விஷயங்களை ஒன்றாக வைத்து நாம் பார்க்கும் போது இந்த வருடம் முழுவதுமே உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
இந்த தட்டை பூஜை அறையில் வைத்தும் பார்க்கலாம்.
மஞ்சள், உப்பு
இந்த நாளில் நாம் வாங்க வேண்டிய முக்கியமான இரண்டு பொருட்கள் மஞ்சள், உப்பு இது வெள்ளிக்கிழமை தமிழ் வருட பிறப்பும் சேர்ந்து வந்திருப்பதால் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் இதை வாங்கினால் மிகவும் விசேஷம் .
அல்லது மதியம் இலை போட்டு வணங்கும் நேரம் வாங்கி விடுங்கள். இதை மாலை விளக்கு வைக்கும் நேரத்திற்குள்ளாக வாங்கி பூஜை அறையில் வைத்து வணங்கி வழிபடுங்கள். வீட்டில் இருக்கும் பழைய உப்பு மஞ்சள் வைத்து வழிபட கூடாது.
அதே போல் மதியம் உணவு வகைகளை தயார் செய்து அத்துடன் வேப்பம் பூ ரசம், மாங்காய் பச்சடி இரண்டையும் கட்டாயமாக செய்து வடை பாயாசத்துடன் பூஜை அறையில் படையல் வைத்து வணங்குவது மிகவும் சிறப்பு.
முக்கியமான தானம்
ஆலயத்திற்கு செல்லும் போது அங்கு உங்களால் முடிந்த அளவிற்கு யாருக்கு எனும் ஒருவருக்கு அன்னதானம் அல்லது ஏதேனும் ஒரு ஜீவராசிக்கு உங்கள் கையில் உண்பதற்கு ஏதேனும் வாங்கிக் கொண்டுங்கள்.
இது அந்த நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான தானமாகும். சித்திரை வழிபாட்டிற்கான எளிமையான வழிமுறை இது.
இந்த வருடம் முதல் உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பம், துயரம் எல்லாம் நீங்கி சந்தோஷம் பெருகி செல்வ செழிப்போடும் வாழ எல்லாம் வந்த இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.