வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மற்றும் பணிபுரிவர்களுக்கான H1 B விசா கட்டணத்தை கிட்டத்தட்ட ஒரு கோடி வரை அதிரடியாக உயர்த்தினார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உயர்கல்வி முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தற்காலிகமாக பணிபுரிய உதவும் OPT திட்டத்திற்கு விண்ணப்பக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.68 லட்சம் வசூலிக்குமாறு டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்திருக்கிறது.
இது, இது வெளிநாட்டு மாணவர்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் அமெரிக்கர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். மற்ற நாட்டினர் வந்து அமெரிக்காவின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் என டிரம்ப் கருதுகிறார்.
எனவே, அதை கட்டுப்படுத்துவதற்காகவே அவர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.