தங்க நாணயத்தில் டொனால்ட் டிரம்பின் உருவம் ; அமெரிக்கா அரசியல் தீவிரமடைந்துள்ள சர்ச்சை
அமெரிக்காவின் 250ஆம் ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட உள்ள தங்க நாணயத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் உருவம் பொறிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அரசியல் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.
இந்த முயற்சி குறித்து Democratic Party கட்சி கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளது.
உயிருடன் உள்ள அதிபர்களின் உருவம் நாணயங்களில் இடம்பெறக் கூடாது என்பது அமெரிக்க ஃபெடரல் சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை மீறும் வகையில் இந்த நடவடிக்கை அமைகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வரலாற்றில் இதற்கு ஒத்த நிகழ்வாக, 1926ஆம் ஆண்டு அமெரிக்காவின் 30ஆவது ஜனாதிபதியான கால்வின் கூலிட்ஜ்னின் உருவம் தங்க நாணயத்தில் இடம்பெற்றது.
அந்த நாணயத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுடன் இணைந்த வடிவில் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, 24 கரட் தங்க நாணயத்தில் டிரம்பின் உருவத்தை பொறிக்க அமெரிக்க கவின் கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த நாணயங்கள் பொதுப் புழக்கத்திற்கு விடப்படமாட்டாது என அமெரிக்க கருவூல அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக மரபுகளுக்கு முரணானவை; மன்னர்கள் மற்றும் சர்வாதிகாரிகளே தங்கள் உருவங்களை நாணயங்களில் பதிப்பர்” என Democratic Party கட்சி விமர்சித்துள்ளது.
மேலும், அமெரிக்க வரலாற்றில் தமது அடையாளத்தை பதிய முயலும் மற்றொரு அரசியல் நடவடிக்கையாக இது பார்க்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.