கோழி உரத்தை ஏற்றி பயணித்த லொறி விபத்து
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் லொறியொன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
குளியாப்பிட்டியவில் இருந்து நுவரெலியாவுக்கு கோழி உரத்தை ஏற்றி பயணித்த லொறியே பாரிய வளைவில் தடுப்பு வேலியையும் உடைத்துக்கொண்டு தேயிலை தோட்டத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர்களும் இருந்துள்ளனர். எனினும் அதிஸ்ட வசமாக சிறு காயங்களுடன் மூவரும் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அவ்விடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதுகாப்பு வேலிகளை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.