காதலியிடம் தப்பியோட முயன்ற இளம் பிக்குவுக்கு சிக்கல்!
டுபாயில் உள்ள தனது முஸ்லிம் காதலியிடம் செல்வதற்கு முயன்ற இளம் பிக்கு ஒருவை விளக்கம்றொயலில் வைக்கபப்ட்டுள்ளார்.
சீதுவை நந்தாராம விஹாரையின் விஹாராதிபதி நெதகமுவ மஹாநாம படு கொலை சம்பவம் தொடர்பாக இளம் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான இளம் பிக்குவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மிலான் ஜயசூரிய நேற்று (17) சனிக்கிழமை உத்தரவிட்டார்.
ஏக்கல சுகந்தசிறி (வயது 18) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்படுள்ளார்.
கட்டுநாயக்காவில் கைது
சீதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டாரவின் வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை கட்டுநாயக்காவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
சந்தேகரபராக பிக்கு விஹாராதிபதியை கொலைச் செய்துவிட்டு, விஹாரையில் இருந்த பெறுமதியான இரண்டு வாகனங்களை விற்றுள்ளார்.
டுபாய் முஸ்லிம் காதலி
இதனையடுத்து , டுபாயில் உள்ள தனது முஸ்லிம் காதலியிடம் செல்வதற்கு முயன்ற போதே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விஹாராதிபதியை படுகொலைச் செய்வதற்காக முஸ்லிம் காதலியின் உறவினர்கள் சிலர் ஒத்துழைத்தாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.