பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவோருக்கு சிக்கல் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அபாயகரமான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக இலங்கை காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, கடுமையான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர், தற்போதுள்ள போக்குவரத்துச் சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் அபராதங்களுடன் கூடுதலாக குற்றவியல் வழக்குகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்கள்
இந்தநிலையில், கடுமையான போக்குவரத்து விதிமீறல்கள் இனி சம்பவ இடத்திலேயே அபராதம் விதிப்பதன் மூலம் மட்டும் கையாளப்படாது.
மாறாக, விதிமீறல்களில் ஈடுபடுவோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்தெரிவித்துள்ளார்.
ஜூன் 27 அன்று 321 அபாயகரமான மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் சம்பவங்களையும் ஜூன் 28 அன்று மேலும் 315 சம்பவங்களையும் பொலிஸார் கண்டறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வாகனத் தொகுப்பில் உந்துருளிகள் 51வீதமாகவும் முச்சக்கர வாகனங்கள் 12வீதமாகவும் பயன்பாட்டில் உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள் தெரிவித்துள்ளார்.