பிக்பாஸ் நிகழ்ச்சி; கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசனுக்கு சிக்கல்!
கொரோனா விதிமுறையை மீறி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கம் கேட்கவுள்ளதாக தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிக்பொஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசனாக நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கடந்த 22ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
இந்நிலையில், வீடு திரும்பி 7 நாள்கள் முடிவடைவதற்குள் கடந்த சனிக்கிழமை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி படப் பிடிப்பில் கலந்து கொண்டதாக கமல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆதை தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாட்களிலேயே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டிருந்தாலும், அதன் பின் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை என சுட்டிக்காட்டிய அவர், அதனை மீறி அவர் செயல்பட்டதற்கு சரியான விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா விதிமுறைகளின்படி, நோய்த் தொற்றிலிருந்து வீடு திரும்பிய பிறகு 7 நாள்கள் கட்டாய வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.