ஆலய திருவிழாவில் தேரில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி
ஆலய திருவிழாவில் தேரில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட் கிராமத்தில் ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் 10 நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது.
முதல்வர் மாணிக் சாஹா இரங்கல்
இதன்போது தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது மேல்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரை வடம்பிடித்து இழுத்த 6 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 15 பேர் காயமடைந்தனர்.
“காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஆலய தேரில் இடம்பெற்ற அசம்பாவிதத்துக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா இரங்கல் தெரிவித்துள்ளார்.