மித்தெனிய துப்பாக்கிச்சூடு சம்பவம் ; இருவருக்கு பகிரங்க பிடியாணை உத்தரவு
மித்தெனிய - கடவத்த சந்தியில் தந்தையொருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியதாகக் கூறப்படும் இருவருக்கு எதிராக வலஸ்முல்ல நீதவான் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, டுபாயில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் தெம்பிலி லஹிரு மற்றும் பெக்கோ சமன் ஆகியோருக்கு எதிராகவே இன்று பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மித்தெனிய காவல்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சந்தேக நபர்களுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மித்தெனிய முக்கொலை தொடர்பில் இதுவரையில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, காவல்துறையினரால் நீதிமன்றில் இன்று பிடியாணைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.