திருகோணமலை விகாரை வழக்கு ; நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு
திருகோணமலை கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (26) நீதிபதி முகம்மட் ஷரீப் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜனவரி மாதம் நீதிமன்றினால் திகதி
இதன்போது எதிர்தரப்பில் எவரும் முன்னிலையாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது
இதன் பின்னரே வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்காக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டத்தரணிகள் குழாம் நேற்றையதினம் (25) திருகோணமலைக்கு வருகை தந்து விடயம் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.