திருகோணமலை - தோப்பூரின் முதல் பெண் சட்டத்தரணி!
திருகோணமலை - தோப்பூரின் முதல் பெண் சட்டத்தரணியாக முகம்மது அலி பாத்திமா மன்ஸிபா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
திருகோணமலை - தோப்பூரை பூர்வீகமாகவும் மூதூரை வசிப்பிடமாக கொண்ட முகம்மது அலி பாத்திமா மன்ஸிபா கடந்த 15ஆம் திகதியன்று, இலங்கை உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
முகம்மது அலி பாத்திமா , திருகோணமலை - தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பட்டதாரியுமாவார்.
இந்நிலையில் பாத்திமா மன்ஸிபா, தனது பதவி மூலம் நமது நாட்டுக்கும் மக்களுக்கும், இன, மத பேதமின்றி தொடர்ந்தும் மகத்தான சேவை புரியவும், மென்மேலும் பதவியுயர்வு அடையவும் பிரதேச மக்கள் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.