திருகோணமலையில் வீடொன்றில் இனந்தெரியாத கும்பல் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!
திருகோணமலை உள்ல வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் இனந்தெரியாதோரால் தீக்கிரைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் நடந்தேறியுள்ளது.
இந்த சம்பவம் இரவு (28-05-2022) இடம்பெற்றுள்ளது.
குடும்பஸ்தரான ஏ.சி.பரீட் என்பவருக்குச் சொந்தமான பல்சர் ரக மோட்டார் சைக்கிளை வீட்டு முற்றத்தில் வழமை போன்று நிறுத்தி விட்டு, இரவில் தூங்கியபோது தீ பற்றி எரியும் வாசனை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்றிரவு இரவு 12.30 மணியளவில் வெளியில் வந்து பார்த்தவுடன், மோட்டார் சைக்கிள் எறிந்துள்ளது.
மோட்டார் சைக்கிளுடன் துணி உலரவைக்கும் இயந்திரம், சிறிய ரக துவிச்சக்கர வண்டியுடனான, உடுப்பும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த மோட்டார் சைக்கிள் லீசிங்ங்கில் இருப்பதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சம்பவ இடம்பெற்ற இடத்திற்கு சென்று பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.