தமிழர் பகுதியில் தாய் தந்தையரின் நினைவாக தம்பதியினர் செய்த நெகிழ்ச்சியான செயல்!
திருகோணமலையில் 3 ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தாய் தந்தையரின் நினைவாக தம்பதியினர் தானம் செய்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (10-01-2024) பதிவாகியுள்ளது.
திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் உள்ள கெமுனு திஸ்ஸ மற்றும் அவரது மனைவி தம்மிகா தமயந்தி என்ற தம்பதியினரே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை செய்து பௌத்த துறவிகளுக்கும், விகாரைகளுக்கும் உதவி செய்கின்ற நிலையில் இம்முறை தமது பெற்றோர்களுக்காக தானம் செய்யும் நோக்கில் மூன்று ஏக்கர் வேளாண்மையை மாடுகளுக்கு உண்பதற்காக தானம் செய்துள்ளார்.
மஹதிவுல்வெவ - திம்பிரிவெவ ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமியின் ஆசிர்வாதத்துடன் சமய வழிபாட்டுடன் இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதன்போது, கிராம மக்களும் கலந்து கொண்டு சமய வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மாடுகளையும் வேளாண்மை உண்பதற்காக கொண்டு வந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.