திருகோணமலை, மட்டக்களப்பு ரயில் சேவைகள் இரத்து
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மறு அறிவித்தல் வரை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாலும் மண்சரிவு அபாயம் காணப்படுவதாலும் கிழக்கு ரயில் மார்க்கத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்து செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்
கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு (காலை 06.00 மணி)
கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு (மாலை 03.15 மணி )
கொழும்பு கோட்டை - திருகோணமலை (இரவு 09.30 மணி)
கொழும்பு கோட்டை - மட்டக்களப்பு (இரவு (11.00 மணி)
மட்டக்களப்பு - கொழும்பு கோட்டை (அதிகாலை 01.00 மணி)
மட்டக்களப்பு - கொழும்பு கோட்டை (காலை 06.10 மணி)
மட்டக்களப்பு - கொழும்பு கோட்டை (இரவு 7.40 மணி)
திருகோணமலை - கொழும்பு கோட்டை (இரவு 07.30 மணி)