முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மாவீரர்களின் உரித்துடையோர்கள், ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ஆண்டுதோறும் நடாத்தப்படுகின்ற எங்களுக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கார்த்திகை 27 இதே முல்லைத்தீவு கடற்கரையிலே நடைபெற இருக்கின்றது.
குறித்த கடற்கரை கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குரியதாக இருக்கின்றதனால் கடற்கரையை பயன்படுத்துவதற்கு பிரதேச சபையின் தபிசாளரிடம் முன் அனுமதி பெற்றிருக்கின்றோம்.

கார்த்திகை 25,26,27 ஆகிய மூன்று நாட்களும் கடற்கரையில் நாங்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் இவ் நாளில் வருகை தந்து நினைவஞ்சலியை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கள் தெரிவித்தனர்.

