தமிழர் பிரதேசங்களில் ஆரம்பமானது மாவீரர் வாரம்; கண்ணீரில் உறவுகள்
தேச விடுதலைக்காக போராடிய வீரர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று (21) யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்றது.
சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தின் தீவக நினைவேந்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஈகச் சுடரேற்றப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல்
இன்று (21) ஆரம்பமாகும் குறித்த மாவீரர் வாரம் எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் நூற்றுக்கணக்கான உறவுகளின் பங்கேற்புடன் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.
இதனிடையே சனிக்கிழமை (22) காலை 9.30 மணியளவில் தீவகத்தில் வாழும் மாவீரர்களின் உறவுகள் உரித்தாளர்கள் மதிப்பளித்து கௌரவம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் பொது விளையாட்டரங்கின் திறந்தவெளி அரங்கில் குறித்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றது.
