திருகோணமலையில் வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள் ; மக்கள் பெரும் அவதி
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், திருகோணமலை சுமேதகம பகுதியில் வீசிய கடுங்காற்றினால் 3 மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர், மூதூர் கிழக்கு, வெருகல், கிண்ணியா, குச்சவெளி, புல்மோட்டை, தம்பலகாமம் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்
இன்று (26) அதிகாலை வீசிய கடுமையான காற்றின் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் கழிவுகளை எரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணமும் சேதமடைந்துள்ளது.

தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அங்கு கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதியில் பயணிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.