பிரபல பாடசாலைக்கு அருக்கில் ஆபத்தான வகையில் மரங்கள் ; கோரிக்கை விடுத்தும் பயனில்லை; அதிபர் கவலை
நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை நிலைவிவரும் நிலையில், மரங்கள் முறித்து பல்வேறு விபத்துக்களும் உயிர்பலிகளும் நடந்துள்ளன.
இந்த நிலையில் அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரியில் தரம் 06 மாணவர்களின் வகுப்பறைக்கு அருகாமையில் ஆபத்தான வகையில் பாரிய ஐந்து மரங்கள் காணப்படுகின்றதனால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சத்தில் மாணவர்கள்
இந்நிலையில் குறித்த ம்மரங்களை அகற்றித்தருமாறு, கல்லூரி அதிபர் பிரதேச செயலாளர் வனப்பாதுகாப்பு செயலாளர், கிராமசேவையாளர் ஆகியோரும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்து மூன்று மாதங்களாகியும் எவ்விதப்பயனும் கிடைக்கவில்லையென்று கல்லூரி அதிபர் கவலை தெரிவித்துள்ளார்.
ஆபத்தான வகையில் மரங்கள் காணப்படுவதால், தரம் 6 மாணவர்களின் வகுப்பறைகள் பாதுகாப்பு கருதி வேறு மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அதேவேளை இப்பாரிய மரங்களுக்கருகிலுள்ள மலசலக்கூடங்களைக் கூட மாணவர்கள் பாவிப்பது தடைசெய்யப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் , மாணவர்களின் பாதுகாப்பு கருதியே , மேற்கண்ட நடவடிக்கைகளை தாம் எடுத்ததாக அதிபர் தெரவித்தார்.
கல்லூரியின் பழைய மாணவர்களும், பெற்றோரும் இப்பாரிய மரங்களை உடன் அகற்றித்தருமாறு, சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கைகளை விடுத்தும், எவ்வித பயனும் கிடைக்கவில்லையெனவும் கூறப்படுகின்றது.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு இம்மரங்களால் ஏற்படக்கூடிய பேரழிவினை தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்டவர்கள் உடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகநலன்விரும்பிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.