மனிதப் பலி கொடுத்து புதையல் வேட்டை? ஜனாதிபதி அனுர திடுக்கிடும் தகவல்
ஒரு பெண் பலியிடப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்பும் புதையல் வேட்டை சம்பவம் தொடர்பாக மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசாரணையில் உள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (26 ) தெரிவித்தார்.
கொழும்பில் நடந்த ஒரு நிகழ்வில் ஜனாதிபதி, இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மனித பலி கொடுத்ததாக குற்றச்சாட்டு
இந்த வார தொடக்கத்தில், பெலியத்த பகுதி பொலிஸார் புதையல் வேட்டை குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உட்பட ஐந்து சந்தேக நபர்களை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராமவாசிகளின் ரகசிய தகவலின் பேரில், ஒகஸ்ட் 23 ஆம் திகதி டோலஹேன தோட்டத்திற்கு அருகிலுள்ள பெலியத்த-திக்வெல்ல வீதியில் 12 ஏக்கர் நிலத்தில் இந்தக் குழுவைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் காவலில் எடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளனர்.எனினும் மனித பலி கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் இன்னும் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.