மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படலாம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலை தொடர்ந்தால் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 552,994 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 14,034 ஆகவும் பதிவாகியிருந்தது.
இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட் செயலூக்கியாக (பூஸ்டர்) பைஸர் தடுப்பூசி இன்று மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன.