விமானநிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இளவயது நபர்!
கொழும்பு- கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் தங்க பிஸ்கட்டுகளை கடத்திவந்த வர்த்தகர் ஒருவர் இன்று (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த நபர், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த சந்தேகநபரின் பயணப் பொதியிலிருந்து 16 தங்க பிஸ்கட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த வர்த்தகரிடம் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் நான்கு கோடியே 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.