சூரிய கிரக அமாவாசையில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி ; மறந்தும் இந்த 5 விஷயங்களை செய்துடாதீங்க

Viro
Report this article
சூரிய கிரகணம், சனிப் பெயர்ச்சி, சனிக்கிழமையில் வரும் அமாவாசை ஆகிய மூன்றுமே மிக முக்கியமான நிகழ்வுகளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சில விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை அனைவருமே கடைபிடிக்க வேண்டும் என்றாலும் சனி பகவான் பெயர்ச்சியாகி செல்லும் மீன ராசிக்காரர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
சனிப் பெயர்ச்சி அன்று இந்த விடயங்களை தவிர்ப்பதால் சனி பகவானால் ஏற்படும் தீய விளைவுகள் குறையும். எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் குறையும். அதோடு நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும் உதவி செய்யும்.
சனிப்பெயர்ச்சி அன்று தவிர்க்க வேண்டியவை
01. சாமி சிலைகளை தொடக் கூடாது : சனிப் பெயர்ச்சி அன்று சாமி சிலைகளை தொட்டு வணங்குவது மிகவும் அசுப செயலாக பார்க்கப்படுகிறது. அதனால் சாமி சிலைகளை சிவப்பு அல்லது மஞ்சள் நிற துணியால் மூடி வைக்க வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு புனிதமான கங்கை நீர் அல்லது வேறு ஏதாவது தீர்த்தம் கொண்டு சுத்தப்படுத்தி பூஜை செய்யலாம்.
02. வாக்குவாதங்களை தவிருங்கள் : சூரிய கிரகணத்தன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால், அன்ற அமாவாசையும் இணைந்து வருவதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் தேவையற்ற சண்டை, வாக்குவாதங்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.
03. வெளி உணவுகளை தவிர்ப்பது : சூரிய கிரகணம் நிகழும் போது உணவு ஏதும் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதிலும் வெளி உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள், சோம்பல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஒருவேளை கிரகண நேரத்தில் சாப்பிடுவது அவசியம் என்றால் வீட்டிலேயே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.
04.அடர் நிற ஆடைகளை தவிர்ப்பது : இந்த நாளில் அடர் நிற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மீன ராசிக்காரர்கள் அடர்ந்த நிறங்கள் அல்லது கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கருப்பு சனி பகவானுக்குரிய நிறமாகும். ஆனால் சனிப் பெயர்ச்சி அன்று கருப்பு ஆடைகளை அணிந்தால் அது சனியின் செல்வாக்கை தீவிரப்படுத்தும். அதற்கு பதிலாக வெள்ளை, மஞ்சள் அல்லது மென்மையான நிறங்களை அணிவது சிறப்பு.