நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு மீண்டும் பயணத்தை தொடங்கவுள்ள புகையிரதங்கள்
நாட்டில் தனிமைப்படல் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் 50 அலுவலக புகையிரதங்கள் சேவையில் பயணிக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் இயங்கமால் இருந்த புகையிரதங்களில் ஏற்பட்டிருந்த மினசாரக் கோளாறுகள், தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளிட்டவை நீக்கம் செய்யப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் நிறைவைடைந்துள்ளதாக போக்குவரத்து ஒழுங்குகள் பிரிவின் தலைமை பொறியாளர் கே.ஜீ.பண்டார தெரிவித்தார்.
மேலும் 91 புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதான புகையிரத மார்க்கத்தில் 33 சேவையையும், வடக்கு மார்க்கத்தில் 2 சேவையையும், சிலாபம் மார்க்கத்தில் 14 சேவைகளும், களனிவெளி மார்க்கத்தில் 8 சேவைகளும், கடலோர மார்க்கத்தில் 34 புகையிரத சேவையையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.