உணவு கையாளுபவர்களுக்கு பயிற்சி
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு கையாளுபவர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
பாவனைக்குத் தகுதியற்ற உணவைத் தயாரிக்கும் இடங்களைக் கண்டறியவும் , அங்கு பணிபுரியும் நபர்களின் தூய்மை குறித்து ஆராய்வதற்காகவும் தற்போது, உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.
நாட்டின் பதினெட்டு வீதமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் பொருத்தமற்ற உணவுகள் தயாரிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நாட்டில் உள்ள பல உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் உணவு கையாளுபவர்கள் மிகவும் அழுக்காக இருப்பதாக அண்மையில் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மக்களுக்கு சுத்தமான மற்றும் தரமான உணவை வழங்கக்கூடிய
உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை நிறுவும் நோக்கில் உணவு தயாரிப்பவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.