ஆசைக்காக பாடசாலை மாணவன் செய்த தவறான செயல் ; தீவிரமாகும் விசாரணை
இரத்தினபுரி, அயகம, பிம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் அயகம பொலிஸாரால் நேற்று (17.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அயகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அயகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் வைத்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பாடசாலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
15 வயதுடைய பாடசாலை மாணவனே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசையில் வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக பாடசாலை மாணவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.