கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்
கிளிநொச்சி மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவத்தில் மீன் பிடிக்கச் சென்ற 46 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக அவர் நீரில்மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.