காஞ்சனா 3 நடிகையின் விபரீத முடிவு; கதறி அழுத ராகவா லாரன்ஸ்
பிரபல நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சனா 3 படத்தில் பேயாக நடித்த ரஷ்ய நாட்டு மொடல் அழகி அலெக்ஸாண்ட்ரா ரி-ஜாவியே (24) இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் கதறி அழுத்ததாக கூறப்படுகின்றது.
வடக்கு கோவாவின் சியோலிமில் உள்ள ஆக்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கடந்த 20ஆம் திகதி அலெக்ஸாண்ட்ரா ரி-ஜாவி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
ரஷ்யாவை சேர்ந்த இவர் மொடலிங், திரைப்படத்துறையில் பணியாற்றுவதால் இந்தியாவில் தங்கி உள்ள நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு புகைப்படக்காரர், தன்னை பிளாக்மெயில் செய்ததாகவும், பாலியல் உதவிகள் கோரியதாகவும் அவர் 2019 ல் முறைப்பாடளித்திருந்தார். எனினும், அவரது மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு வழக்கு விவகார சமூக ஊடக பதிவுகளிற்கும் தொடர்பிருப்பதாப தெரியவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை அலெக்ஸாண்ட்ராவின் ஆண் நண்பர் அவரை விட்டு பிரிந்து சென்றதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.
காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸூக்கு ஜோடியாக ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி ஆகியோர் நடித்திருந்த நிலையில், படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக அலெக்ஸாண்ட்ரா ரி-ஜாவி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.