சோகத்தை ஏற்படுத்திய விபத்துக்கள்; சிறுமி உட்பட மூவர் பலி!
வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இந்த விபத்துக்கள் புத்தளம், பிடிகல, கிண்ணியா ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. கிண்ணியா பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் விபத்தின் போது விபத்தில் உயிரிழந்த சிறுமி, தந்தை, தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், சாரதியான தந்தை காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, புத்தளம் வீதியின் இடது பக்கத்திலிருந்து வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 48 வயதுடைய சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் பிடிகல பிரதேசத்தில் பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் அதே பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சித்திரகொட, அமுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.