திருமணமாகி 08 மாதத்தில் அரங்கேறிய சோகம் ; மனைவியின் செயலால் துடிதுடித்து பிரிந்த உயிர்
திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் பகுதியில் வசித்து வந்தவர் ககன்ராவ் (வயது 29). இவர் வங்கி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மேகனா ஜாதவ். இருவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குடும்பத் தகராறு
புதுமண தம்பதியின் வாழ்க்கையில் சமீபகாலமாக குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதாவது மேகனா ஜாதவ், தனது கணவரிடம் எந்த காரணமுமின்றி அடிக்கடி தகராறு செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த தகராறு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதனால் புதுமாப்பிள்ளை ககன் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினமும் ககன்ராவிடம், அவரது மனைவி தகராறு செய்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த ககன்ராவ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் ககன்ராவின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சம்பவம் பற்றி தககவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்து வந்து, தற்கொலை செய்த ககன்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த தற்கொலை தொடர்பாக ககன்ராவின் சகோதரி, கிரிநகர் பொலிஸில் ஒரு புகார் அளித்தார்.
அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி தொல்லையால் புதுமாப்பிள்ளை திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.