சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய இருவருக்கு நேர்ந்த சோகம்!
இறக்குவானையில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு சுரங்கம் தோண்டிய போது மண் மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளானர்.
இறக்குவானை – மாதம்பை தோட்ட இலக்கம் 01 பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி மாணிக்கக்கல் அகழ்வதற்கு தயாரான போது சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் சுப்பிரமணியம் தியாகராஜா மற்றும் சோலமுத்து செல்வகுமார் ஆகிய இருவரும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த சுரங்கத்தின் அடியில் இருந்த இருவரும் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் சிறுகாயங்களுடன் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, கஹவத்தை ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.