மனைவியுடன் திருமணத்திற்கு சென்ற குடும்பஸ்தருக்கு நடந்த துயரம் ; விசாரணைகள் தீவிரம்
நாவலப்பிட்டிய, பெனிதுடுமுல்ல பகுதியில் நேற்று (18) திங்கட்கிழமை மண்மேடு ஒன்றிலிருந்து கீழே தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் மனைவியுடன் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு, திரும்பிக்கொண்டிருந்த பெனிதுடுமுல்ல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர் தனது மனைவியுடன் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தவிபத்தின் போது உயிரிழந்தவரின் மனைவியும் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் நாவலப்பிட்டிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.