இன்று ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்; மூவருக்கு நேர்ந்த கதி
உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெலிகம, அவரிவத்தையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உணவகம் மற்றும் அருகிலுள்ள ஐந்து வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அசம்பாவிதத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஹோட்டலின் சமையலறையில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த அவ்விடத்தின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் அயலவரான பெண் ஆகியோர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
எனினும் அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் வெலிகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
