இலங்கையில் சுற்றுலா சென்ற குழுவிற்கு நேர்ந்த சோகம் ; தீவிரமடையும் தேடுதல்
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல கடலில் நீராடச்சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (29) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மூன்று பேர் நீரில் மூழ்கியதில், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இருவரை மீட்டுள்ளதுடன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

தேடுதல் நடவடிக்கை
காணாமல்போனவர் கராடுவ, கம்புறுகமுவ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கம்புறுகமுவ பகுதியைச் சேர்ந்த சுமார் 40 பேர் கொண்ட குழு ஒன்று சுற்றுலாவிற்காக குறித்த பகுதிக்கு வந்து கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உனவட்டுன பொலிஸ் உயிர்காக்கும் படையினர் காணாமல் போன நபரைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்