யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த கதி ; அதிகாலையில் அரங்கேறிய பயங்கரம்
யாழ்ப்பாணம் நாவாந்துறை இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள வீட்டொன்றில் இன்று (05) காலை இடம்பெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்பகட்ட தகவல்கள்
ஆரம்பகட்ட தகவல்களின்படி, கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் பட்டா ரக வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் சம்பவத்திற்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.