தமிழர் பகுதியொன்றில் பள்ளிவாசலுக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் குரங்குக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு குரங்கு கடிக்கு உள்ளாகியுள்ளார்.

குரங்கு கடி
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் நேற்று மாலை பள்ளிவாசலுக்கு மதக் கடமையை நிறைவேற்ற தொழுகைக்காக சென்றபோது குரங்கு தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சிறுவன் காயங்களுக்கு உள்ளான நிலையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக குரங்குகள், தொடர்ச்சியாக மக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதால் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.