யாழ்.வல்லைவெளி முனியப்பர் ஆலயத்தில் கும்பிட சென்றவருக்கு நேர்ந்த சோகம்
யாழ்.வல்லைவெளி முனியப்பர் ஆலயத்தில் கும்பிடுவதற்காக சென்ற நபர் ஒருவர் 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை இழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து பண பையை திருடிய கும்பல் அதிலிருந்த ATM அட்டையை பயன்படுத்தி 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தையும் திருடியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த 28ஆம் திகதி பருத்தித்துறையை சேர்ந்த நபர் ஒருவர் வல்வைவெளி முனியப்பர் கோவிலில் கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
கும்பிட்டுவிட்டு திரும்பிய நிலையில் மோட்டார் சைக்கிளின் ஆசனத்திற்கு கீழ் உள்ள பெட்டியில் இருந்து பண பை திருடப்பட்டுள்ளதுடன், ஆசனம் பிரிக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளார்.
அதன் பின்னர் பார்த்தபோது பணப்பை மற்றும் 23 ஆயிரம் ரூபாய் பணம் ஆகிய திருடப்பட்டுள்ளது.
அத்துடன் பண பையில் இருத்த ATM அட்டைகளும் காணாமல் போயிருந்த நிலையில் அச்சுவேலியில் உள்ள வங்கி கிளை ஒன்றில் சுமார் 2 லட்சத்தி 90 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலியுள்ள வங்கி தன்னியக்க இயந்திரத்தின் மூலம் பணம் திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.