"ஜெய் பீம்" படத்தில் நடித்த சிறுமிக்கு நேர்ந்த அவல நிலை
தீபாவளி வெளியீடாக அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் தான் "ஜெய் பீம்".
இந்த திரைப்படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் இருளர் பழங்குடியினரின் அவளை நிலைக் குறித்து கூறப்பட்டிருக்கும். இதில் இருளர் மக்களுக்காக போராடும் வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யா அவர்கள் நடித்ததோடு படத்தையும் அவரே தனது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராஜாகண்ணு – செங்கணி தம்பதியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த குழந்தையின் நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்ததற்காக அந்தக் குழந்தையின் டிசியை வாங்க சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தற்போது இந்த தஃவளந்து மிகவும் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.