மலையக இளைஞனுக்கு மன்னாரில் நேர்ந்த துயரம்
மன்னார் – தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கோம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
நேற்று மாலை (7)இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்ப வறுமை காரணமாக மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஹட்டன் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சந்திரகுமார் எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் உணவகங்களில் தொழிலாளராக பணி புரிந்து வந்ததாக கூறப்படுகின்றது.
விபத்து இடம்பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்,