இரகசிய தகவலால் பிடிபட்ட ஆண், பெண் ; காருக்குள் அரங்கேறிய செயல் அம்பலம்
மஹவ, எலவக்க பகுதியில் 771 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16 கிராம் 77 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (21) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேகநபர்களும் மஹவ, பலல்ல பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து பின்னர், குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது காரைச் செலுத்திய நபரிடமிருந்த பையொன்றிலும், அதில் பயணித்த பெண்ணின் கைப்பையொன்றிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் மற்றும் கொக்கெய்ன் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரை மேலும் சோதனையிட்டபோது, போதைப்பொருள் நிறுப்பதற்குப் பயன்படுத்தப்படும் தராசு ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஆண் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என்பதுடன், பெண் பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவராவார்.
குறித்த கார் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர், மஹவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.