யானை தாக்கியதில் விவசாயிக்கு நேர்ந்த சோகம்!
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரக்குளம் காயனடி பிரதேசத்தில் யானை தாக்கி விவசாயி பலியான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் தங்கராசா இவ்வாறு சடலமாக மிட்கப்பட்டவராவார்.இவருக்கு வயது 55 என தெரியவந்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் பயிர்ச்செய்கையுடன் மாடு வளர்ப்பிலும் ஈடுபடும் குறித்த நபர் சம்பவ தினத்தன்று பால் கறப்பதற்காக தனது மாடுகளை தேடிச்சென்ற போது காட்டுக்குள் மறைந்திருந்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே பலியானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.