இசை நிகழ்ச்சி பார்க்கச்சென்றவருக்கு இறுதியில் காத்திருந்த சோகம் ; நள்ளிரவில் நடந்த அசம்பாவிதம்
ஹொரணை, வகவத்த களுபஹன பாடசாலைக்கு அருகில் அதிக வேகமாகவும் தலைக்கவசம் இன்றியும் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீழ்ந்ததிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் உயிரிழந்தவர் 44 வயதுடைய நபராவார்.
இவர் கடந்த நாள் ஹொரணை நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2.00 மணியளவில் இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
இரவு நேரத்தில் இந்த விபத்தைக் எவரும் பார்க்கவில்லை எனவும், காலையில் வீதியால் சென்ற நபர் ஒருவர் சம்பவத்தைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபர் ஹொரணை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, செயலி (App) மூலம் பெறப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றில் வகவத்த பகுதிக்கு வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மற்றொரு நண்பரின் மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாகச் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.