அறையில் இருந்த காதலியின் புகைப்படம் ; தமிழர் பகுதியில் மாணவன் எடுத்த விபரீத முடிவால் துயரம்
அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று (07) புதன்கிழமை 19 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடற்கூற்றுப் பரிசோதனை
குறித்த மாணவன் செவ்வாய்க்கிழமை (06) நள்ளிரவு வரை பாண்டிருப்புப் பகுதியைச் சேர்ந்த தனது காதலியான சக பாடசாலை மாணவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், தனது பணப்பையில் இருந்த காதலியின் புகைப்படத்தை அறையில் காட்சிப்படுத்திய மாணவன், தனது கையை வெட்டியுள்ளார்.
இதன்போது, ஏற்பட்ட அதிக இரத்தப்போக்குடன், தனது தாயாரின் சேலையின் உதவியால் வீட்டின் வெளியில் உள்ள மேல் தளத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.
விளக்கமறியலில் ஷிரந்தியின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் ; உதவ வந்த பெண் அதிகாரியிடம் நடந்துகொண்ட விதத்தால் சர்ச்சை
அத்துடன், தூக்கில் தொங்கும்போது ஏற்படும் சத்தம் வெளியில் கேட்காமல் இருப்பதற்காகத் துணியொன்றையும் தனது வாயில் திணித்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவன் நான்கு மாதங்களுக்கு முன்னரே தனது தந்தையை இழந்துள்ளார். தந்தை மறைந்த சோகத்தில் இருந்து மீளுமுன் இந்தச் சம்பவம் இடம்பெற்றமை குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது தூக்கில் தொங்கியதால் கழுத்தில் ஏற்பட்ட இறுக்கம் காரணமாக மூச்சுக்குழாய் தடைப்பட்டு மரணம் சம்பவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கல்முனைத் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.