கொழும்பு - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் காரணமாக கடவத்தை பகுதியிலிருந்து போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள்
கொழும்பு - கண்டி வீதியின் பண்டாரவத்தை - புவக்பிட்டிய பகுதியில் உள்ள வீதி எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வரை மூடப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையில் மாற்றுவழி பாதையை அமைக்கும் பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடவத்தை நகரின் சந்தியிலிருந்து அதிவேக நெடுஞ்சாலைக்கு செல்லும் வீதியினூடான எல்தெணிய வீதியை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.