அடாவடி கிளிநொச்சி கிராம அலுவலரால் போக்குவரத்து ஸ்தம்பிதம்; மக்கள் விசனம்!
கிளிநொச்சி கிராம அலுவலர் ஒருவர் கிளிநொச்சி – பரந்தன் வீதியில் ஈரமான நெல் மூட்டைகளை பரப்பியதால் இன்று (10) காலை முதல் அந்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வீதியில் நெல் மூட்டைகளை பரப்பியதால் பாடசாலை பிள்ளைகளும், அரச ஊழியர்களும் தத்தமது இடங்களுக்குச் செல்ல முடியாமல் போனதாக கிளிநொச்சி கண்டாவளை பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நெல் மூட்டைகளால் வீதியை மறித்து அட்டூழியம்
குறித்த கிராம அலுவலரின் வயலில் அறுவடை முடிந்து, சாக்குகளில் கட்டப்பட்ட நெல் மூட்டைகளை வீட்டிற்கு கொண்டு செல்லும் போது, நெல் மூட்டைகள் வாய்க்காலில் விழுந்து நனைந்து விட்டதால், சாக்குகளுடன் நெல்லை வீதியின் நடுவே போட்டு காய வைத்ததாக கூறப்படுகின்றது.
கிராம அலுவலரின் முட்டாள்தனமான செயலால் வீதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதுடன், அந்த வீதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் சென்றதாகவும், அவ்வாறு சென்ற வாகனங்களில் ஆம்புலன்ஸும் ஒன்று என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, வீதியில் சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கிராம அலுவலரை திட்டிவிட்டு, அவரது ஊழியர்களைக் கொண்டு நெல் சாக்குகளை சாலையில் இருந்து அகற்ற வைத்துள்ளனர்.
இந்த இநிலையில் அடிக்கடி மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் ரவுடி கிராம அலுவலர் குறித்து கிராம மக்கள் புகார் அளிக்க தயாராகி வருகின்றதாகவும் கூற்ப்படுகின்றது.